சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைத் துறை டி.ஜி.பி மற்றும் கைதிகளுடன் சத்குரு கலந்துரையாடல்..!

கோவை: சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் நேற்று ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்..


கோவை: சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் நேற்று ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி, சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.



குறிப்பாக, கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, எதிர்மறை எண்ணங்களை எப்படி தவிர்ப்பது, மன வேதனையில் இருந்து எப்படி வெளி வருவது, இறந்த காலத்தில் நடந்த சம்பவத்தின் குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சிறைவாசிகள் சத்குருவிடம் கேட்டனர்.

அவர்களின் கேள்விகளுக்கு சின்ன சின்ன கதைகளை மூலம் முக எளிமையாக சத்குரு பதில் அளித்தார்.

அவர்களிடம் பேசிய சத்குரு:

சிறைவாசிகளாக இருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்! நீங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் சிறைக்குள் வந்துவிட்டீர்கள். இனி சில வருடங்களுக்கு சிறைசாலை தான் உங்களுடைய வீடு. நீங்கள் நடந்ததை எண்ணி வருந்துவதால் உங்களுக்கான தண்டனை காலம் குறையாது. நீங்கள் ஆனந்தமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் ஒரே தண்டனை காலம் தான். உங்கள் உள்ளத்தை ஆனந்தமாக வைத்து கொண்டால், உங்கள் தண்டனை காலம் வேகமாக ஓடிவிடும்.

நீங்கள் எதை நினைக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களோ, அதை தான் உங்கள் மனம் நினைக்கும். குரங்கை பற்றி நினைக்க வேண்டாம் என முடிவு செய்தால் மனம் குரங்கையே நினைக்கும். எதை அதிகமாக தவிர்க்க வேண்டும் என தீவிரமாக எண்ணுகிறீர்களோ, அதிலேயே சிக்கி தவிக்க நேரிடும். எனவே, எது வேண்டாம் என முடிவு செய்யாதீர்கள், எது வேண்டும் என முடிவு செய்யுங்கள், என்றார்.

ஈஷாவின் க்ரியா யோகா போன்ற பயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் மனரீதியான பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக வெளி வர முடியும்.நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்றவர்கள் சிறையில் இருக்கும் போது தான் அவர்களின் வளர்ச்சியே நடந்தது என சொல்கிறார்கள். அவர்கள் சிறையில் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டார்கள்.நீங்கள் சிறையில் இருக்கும் நேரத்தை நல்லபடியாக உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். நடந்தவற்றை எண்ணி வருந்தாதீர்கள். நேற்று நடந்ததை யாரும் சரிப்படுத்த முடியாது. நாளை நடக்க வேண்டியதை நாம் உருவாக்கி கொள்ள முடியும்.

சிறைவாசியாக இருக்கும் உங்களுக்கு என் நெஞ்சில் எப்போதும் ஒரு இடம் இருக்கிறது. உங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் தீபாவளி வருகிறது. நீங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த தீபாவளியை கட்டாயம் நல்லபடியாக உணர வேண்டும் என்பது என் விருப்பம்.

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சத்குரு பேசினார்.

கொரோனா பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் 8,165 ஆண் சிறைவாசிகள், 3,453 பெண் சிறைவாசிகள் மற்றும் 3,971 சிறை ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...