தீபாவளி பலகார கடைகளில் உணவு கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை - பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை: தீபாவளி பலகார கடைகளில் உணவு கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: தீபாவளி பலகார கடைகளில் உணவு கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் வரும் சனிக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பொள்ளாச்சி கடைவீதியில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் பட்டாசுகள் வாங்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

கொரோனா நோய் பரவல் இருக்கும் இந்த சூழ்நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார், வட்டாட்சியர் தணிகைவேல், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய சார் ஆட்சியர் வைத்தியநாதன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயம் மாஸ்க் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும். சானிடைசர் உள்ளிட்ட நோய்த்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். பட்டாசு கடைகள் உரிய அனுமதி பெற்று செயல்பட வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செயல்படும் பலகார கடைகளில் உணவு கலப்படம் இல்லாமல், தரமாக தயாரிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் கடைகள் மீதும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி டி.எஸ்.பி சிவக்குமார் கூறுகையில், நகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க 60 பேர் கொண்ட போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சரக்கு வாகனங்கள் நகர்ப்பகுதியில் பகல் நேரத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...