கோவையில் வளர்ச்சிப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ வளர்ச்சிப் பணிகள்‌ மற்றும்‌ தூய்மைப் பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ வளர்ச்சிப் பணிகள்‌ மற்றும்‌ தூய்மைப் பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, ஆர்ட்ஸ்‌ காலேஜ்‌ சாலையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, ஆய்வு செய்து, சாக்கடை கால்வாய்‌ தூர்வாரும்‌ பணி, நடைபாதை அமைக்கும்‌ பணி மற்றும்‌ ஸ்டேட் பேங்க் ஆப்‌ இந்தியா சாலையில்‌ பாதசாரிகளுக்கான பழுதான நடைபாதைகளை சீரமைக்கும்‌ பணி ஆகியவைகளை உடனடியாக மேற்கொண்டு 15 தினங்களுக்குள்‌ மேற்படி பணியினை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, கருப்பகவுண்டர் வீதி பழக்கடைகளில்‌ உள்ள வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். பின்னர், இடையா் வீதியில்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள்‌ தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ மக்கும்‌ குப்பைகள்‌, மக்காத குப்பைகள்‌ தரம்‌ பிரிக்கும்‌ பணிகளை துரிதப்படுத்திட வேண்டும்‌ என சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடர்ந்து மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.82க்குட்பட்ட தியாகி குமரன்‌ மார்க்கெட்‌ பகுதியில்‌ 82 தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு மாற்று

இடம்‌ வழங்குவதற்கான இடத்தை பார்வையிட்ட பின்னர்‌, வார்டு எண்‌.81க்குட்பட்ட வி.ஹெச்‌ சாலையில்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உரம்‌ தயாரிக்கும்‌ மையத்திற்கு கொண்டுவரப்படும்‌ காய்கறிக்கழிவுகள்‌ மற்றும்‌ அதனைக்‌ கொண்டு உரம்‌ தயாரிக்கப்படும்‌ முறைகளையும்‌ அதன்‌ அளவுகளையும்‌ கேட்டறிந்த பின்னர்‌, தயாரிக்கப்படும்‌ உரத்தினை விற்பனைக்காக சந்தைப்படுத்துதல்‌ வழிமுறைகளையும்‌ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌, உதவி பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...