கோவையில் நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய நபர் கைது

கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் தற்போதுகொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் வாலிபர் ஒருவர் இரத்த காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் தற்போதுகொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பரை அடித்து கொன்று விட்டு விடிய விடிய பிணத்துடன் தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தில் ஒர்க்ஷாப் தொழிலாளியான திருப்பதி (வயது 38), என்பவர் கடந்த 7ஆம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருமணமாகாத திருப்பதி, தனியே வசித்து வந்ததும் இவரது வீட்டிற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமுருகன் (45) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

திருமுருகன் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஒர்க்ஷாப்பில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே, ஒர்க்ஷாப்பில் தான் கொலையான திருப்பதியும் வேலை செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி திருப்பதியின் வீட்டில் மது குடித்து வந்துள்ளனர் .

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி வழக்கம்போல் இருவரும், திருப்பதியின் வீட்டில் மது மற்றும் கஞ்சா குடித்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த திருமுருகன் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து திருப்பதியின் தலையில் அடித்துள்ளார்.

இதில், திருப்பதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரம் தீராத திருமுருகன் அருகில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து திருப்பதியின் கழுத்தை இறுக்கிக் உள்ளார். தொடர்ந்து, போதையில் விடிய விடிய பிணத்துடன் படுத்து தூங்கிய திருமுருகன் விடிந்ததும், தனது நண்பரை கொலை செய்ததை அறிந்து தப்பி ஓடிவிட்டார்.

மர்மமான முறையில், திருப்பதி இறந்த சம்பவதை விசாரித்து வந்த பெ நா போலீசார், தொப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த திருமுருகனை போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்கண்ட விவரம் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

பின்னர், அவர் மீது 302, 506 (1)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...