குடிபோதையில் தகராறு; சாப்பாடு கொடுக்க மறுத்த மனைவிக்கு சரமாரியான கத்திகுத்து...!

கோவை: கோவை மதுக்கரை குரும்பபாளையம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37), லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 30), இவர்களுக்கு இளங்கோ (20) என்ற மகன் உள்ளார்.



கோவை: கோவை மதுக்கரை குரும்பபாளையம் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 57), லாரி டிரைவர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 53), இவர்களுக்கு இளங்கோ (26) என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில், ஜனநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று, ஜெகநாதன் வேலைக்கு சென்றுவிட்டு இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால், மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், ஜெகநாதன் அவர் மனைவியிடம் சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார், அவர் குடித்துவிட்டு வந்ததால் சாப்பாடு போட அவர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜெகநாதன், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, பின் கத்தியை எடுத்து குத்தியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மகன் இளங்கோ, தாய் செல்லம்மாளை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, இளங்கோ அளித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகநாதனை 307 பிரிவின் கீழ், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...