கோவையில் குடிபோதையால் விபரீதம்; தாயை அடித்த மகன் மனவருத்தத்தில் விஷம் குடித்து தற்கொலை

கோவை: கோவையில் குடிபோதையில் சாப்பாடு சரியில்லை என்று தாயை அடித்த மகன், மனவருத்தத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மற்றொரு சம்பவத்தில் குடித்துவிட்டு வந்த மகனை, தாய் கண்டித்ததால், தூக்கு மாட்டி மகன் குடி போதையில் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவையில் குடிபோதையில் சாப்பாடு சரியில்லை என்று தாயை அடித்த மகன், மனவருத்தத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மற்றொரு சம்பவத்தில் குடித்துவிட்டு வந்த மகனை, தாய் கண்டித்ததால், தூக்கு மாட்டி மகன் குடி போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (25), கூலி தொழிலாளி. நேற்று இரவு, அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது தாய் மற்றும் தந்தை அவருக்கு சாப்பாடு பரிமாரியுள்ளனர். சிறிது சாப்பிட்ட பிறகு, சாப்பாடு சரியில்லை என்று தாயிடம் சண்டை போட்டுள்ளார்.

அப்போது, சரவணகுமாரை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார், தனது தாய் என்றும் பாராமல் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். கன்னத்தை பிடித்தவாறு, அதே இடத்தில் அமர்ந்து வலியால் அவரது தாய் அழுதுள்ளார்.

மேற்கொண்டு சாப்பிட முடியாமல், வெளியே சென்ற சரவணகுமார், குடிபோதையில் தாயை அடித்து விட்டேன் என்று நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். பின், சிறிது நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய சரவணகுமார், தாய் கண்முன் சுருண்டு விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த அவரது தாயார், ஓடிச்சென்று பார்த்தபோது சரவணகுமார் சாணி பவுடர் குடித்து இருந்தது தெரியவந்தது. பின்பு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால், சரவணகுமார் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

குடி குடியை கெடுத்து விட்டது, என்று அந்த தாய் கதறி துடித்து காட்சி உருக்கமாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று, ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (45), கூலித் தொழிலாளி. இவருக்கு கடன் அதிகம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது தாய் அவரை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வழக்குகளிலும் சட்டப்பிரிவு 174 படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...