கோவையில் திடுக்கிடும் சம்பவம்: போதை ஊசி போட்டு மனைவியை நண்பருக்கு விருந்தாக்கிய கஞ்சா ஆசாமி..!

கோவை: கோவையில் சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க, மாநகர போலீஸ் ஆணையர், சுமித் சரண் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கோவை: கோவையில் சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க, மாநகர போலீஸ் ஆணையர், சுமித் சரண் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 தனிப்படைகள் வீதம் 15 போலீஸ் நிலையங்களுக்கு 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கும்பல்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் திடுக்கிடும் சம்பவம்

இந்த நிலையில், கோவை பெரியகடைவீதி போலீசார் அதே பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். இவர் உக்கடம் பகுதி முழுவதும் இளைஞர்களை குறிவைத்து, கடந்த பத்து வருடங்களாக கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காக, சில இளைஞர்களை தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு தொழில் நடத்தி வந்துள்ளார்.

அந்த நபருக்கு, திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், ஒருநாள் இரவு நேரத்தில் அவர் தனது கூட்டாளியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, போதையில் இருந்த அவர் தான் வைத்திருந்த போதை ஊசியை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவர் மனைவிக்கு போட்டுள்ளார்.

இதனால், மயக்க நிலைக்குச் சென்ற தனது மனைவியுடன், அவரது கூட்டாளியை உல்லாசமாக இருக்குமாறு கூறி உள்ளார். பின், அவர் மனைவியுடன், அவர் கூட்டாளி உல்லாசமாக இருப்பதை, தனது செல்போனில் வீடியோ எடுத்து அவர் ரசித்துள்ளார்.

தொடர்ந்து, அவரது மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்ததால், அவரை பிரிந்த மனைவி, தனது குழந்தைகளை அழைத்துச் தனியே சென்றுவிட்டார்.

தற்போது, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது மனைவியிடமும் விசாரித்ததில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப் போவதில்லை என பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

இதை தொடர்ந்து கஞ்சா வியாபாரி உடன் தொடர்புடைய பெண் கஞ்சா வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்த சென்ற போது, மூவரும் அரைகுறை ஆடைகளுடன் இருந்துள்ளனர்.

போதை ஊசி செலுத்தி கஞ்சா வியாபாரி தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணின் நலன் கருதி, போலீசார் அந்த கஞ்சா வியாபாரியின் பெயர் ஏதும் வெளியிட வேண்டாம், என கூறிவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...