கோவையில் இளம் பெண் உட்பட இரண்டு பேர் தீக்குளித்து தற்கொலை

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இளம் பெண் உட்பட 2 பேர் தீக்குளித்து பரிதாபமாக இறந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இளம் பெண் உட்பட 2 பேர் தீக்குளித்து பரிதாபமாக இறந்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சூலூர் அருகே உள்ள பெரியகமலா பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி விமலா (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள அரிசி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டதாகவும், கடந்த 6-ம் தேதி வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விமலா பரிதாபமாக நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட்டை சேர்ந்தவர் எட்டப்பன் இவரது மனைவி பொன்னம்மாள் (75). தொடர்ந்து, உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், விரக்தியடைந்து, நேற்று முன்தினம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பலனளிக்காமல் நேற்று இரவு இறந்து போனார்.

இதுகுறித்து, வால்பாறை சேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...