கோவையில் பண்டிகை கால கூட்டத்தை கண்காணிக்க 8 தனிப்படைகள் அமைப்பு - கோவை ஆட்சியர் தகவல்

கோவை: கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க 8 தனிப்படைகள், அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கு ராஜாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிக்க 8 தனிப்படைகள், அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கு ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து, கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 200 பேர் முதல் 250 பேர், என குறைந்துள்ளது.

இந்த நிலையில், வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், புத்தாடைகள் வாங்க கோவையின் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக, பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கு ராஜாமணி தெரிவிக்கையில்:

கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் தீபாவளி பண்டிகை காரணமாக மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. எனவே, இந்த பகுதியில் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையில் போலீசார், வருவாய்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். அப்போது, முககவசம் அணியாத பொதுமக்கள், கொரோனா தடுப்பு விதிமுறைகைளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள், ஜவுளி கடைகளுக்கு உடனுக்குடன் அபராதம் விதிப்பார்கள்.

கோவையில், தற்போது வேகமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோவை மாநகராட்சியில் 6 ஆயிரம் வீதிகள் உள்ளன. இதில் 30 வீதிகளில் மட்டும் தான் தினமும் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படுகிறது. முன்பு அதிக தொற்று ஏற்பட்ட அன்னூர், எஸ்.எஸ்.குளம் பகுதியில் தற்போது ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் பாதிப்பு ஏற்படுகிறது.

முன்பு மாவட்டத்தில், 200 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. தற்போது 40 என்ற அளவில்தான் அது உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...