தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுகவிற்கு மக்களிடம் ஓட்டு கேட்கும் தகுதி இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.



சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.



கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியிலிருந்த போது, இலங்கைத்தமிழர், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனை போன்ற எந்த பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்தது, திமுக தான். தமிழகத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக, இன்றைக்கு 7 தமிழர் விடுதலை பற்றி பேசுகின்றனர். மக்களிடம் ஓட்டு கேட்பதற்கும் திமுகவிற்கு தகுதி இல்லை", என்றார்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி போன்ற பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால், இன்று கொரோனா காலத்திலும், மாவட்டம் தோறும் சென்று மக்கள் நலப் பணிகளை செய்து வரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். எனவே, வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் ஆவார்", என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...