ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த 102 வயது மூதாட்டியால் பரபரப்பு..!

கோவை: கோவை காரமடை சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த 102 வயதுடைய மூதாட்டி, இன்று கோவை கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை காரமடை சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்த 102 வயதுடைய மூதாட்டி, இன்று கோவை கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

காரமடை சிக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (102). இவருக்கு இரண்டு மகன்கள் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், செல்லமாளுக்கு சொந்தமான 5 ஏக்கர் 25 செண்ட் விவசாய நிலத்தை மகன்கள் மற்றும் மகள்கள் ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு, தன்னை நிர்கதியாக விட்டு விட்டதாக தெரிவித்தார்.

அவருடைய, கடைசி மகள் தான் இட பத்திரத்தை வாங்கிகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தற்போது வாழ வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தான் தற்போது வசித்து வரும் வீடு உள்ள பகுதிகளை மறைத்து வைத்து உள்ளதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க காரமடை போலீசாரிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

இந்த நிலையில், இன்று மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவரை போலீசார் தடுத்தி நிறுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறி சமாதானப்படுத்தினர்.



தனக்கு என்று தற்போது இருக்கும் வீட்டை மீட்டு தர வேண்டும், என்று கூறியபடி 102 வயது செல்லம்மாள், ஆட்சியர் அலுவலகத்தைை விட்டு செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். அச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...