ஆவின் பாலகம் அமைக்க முன்பணம் செலுத்த கால அவகாசம் கேட்டு, விபத்தில் கை, கால்கள் செயலிழந்த நபர், கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம்.கடந்த 20 வருடங்களுக்கு முன் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவரது, கை,கால்கள் செயலிழந்தது.



கோவை: கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம். கடந்த 20 வருடங்களுக்கு முன் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவரது, கை,கால்கள் செயலிழந்தது.

இதனையடுத்து 11 வருடங்களுக்கு முன் உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் துவங்கி அதனை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மேம்பால பணிகள் விரிவாக்க பணிகளுக்க்காக அவரது கடை அப்புறப்படுத்தபட்டது.

இந்நிலையில், தனக்கு மாற்று இடம் வழங்ககோரி விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஆணை வழங்கபட்ட நிலையில், 78,000 ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தும்படி தெரிவிக்கபட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.



கொரோனா தொற்று காரணமாக வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வைப்பு தொகை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து முகமது சலீம் கூறும்போது, 82வது வார்டு உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் வைக்கும்போது 21,000 ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தியதாகவும், தற்போது அரசு மருத்துவமனை எதிரில் பாலகம் அமைக்கும் இடம் 73வது வார்டு பகுதிக்குள் வருவதால் புதிய அனுமதி அளிக்கபட்டு உள்ளதால், 78,000 ரூபாய் முன்பணம் செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்தார்.

வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், தானும் தன் மனைவியும் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில், தனது இரு மகன்களில் ஒருவர் கூலி வேலை செய்து வருவதாகவும், மற்றொருவர் தங்களை கவனித்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில், வருமானம் இன்றி தவித்து வருவதால், கடந்த ஆறு மாதங்களாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்பந்திப்பதாக தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான சூழலில், பாலகம் அமைக்க முன்பணம் கட்ட முடியாத சூழலால், முன் பணத்தை மூன்று மாத காலத்தில் கட்ட கால அவகாசம் கொடுத்து, கருணை அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உதவிட வேண்டும் என்று கோரி மனு அளித்ததாக கூறினார்.

மனுவை பெற்றுக்கொண்ட, ஆட்சியர் அவர்கல், தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாக, முகமது சலீம் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...