கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

கோவை: எட்டு மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: எட்டு மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவையில் நாளை முதல் கொரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் நாளை முதல் செயல்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.



இதற்காக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாக திரையரங்குகள் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் ஜோராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



மேலும், 50 சதவிகித இருக்கைகளுடன், ரசிகர்கள் முக கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டும், தனிநபர் இடைவெளியுடன் அமர்ந்து திரைப்படங்களை கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகாத நிலையில், ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் ஆங்கில திரைப்படங்களை மீண்டும் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இது குறித்து, கோவை அர்ச்சனா தர்ஷனா திரையரங்க உரிமையாளர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், தீபாவளிப் பண்டிகை என்பதால் புது படங்கள் வெளியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...