கோவை: நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு, காந்திபுரம், உள்ளிட்ட கடை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கோவை: நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், 100 அடி ரோடு, காந்திபுரம், உள்ளிட்ட கடை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ள போதும், மக்கள் புது துணி, நகை மற்றும் இதர பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர வருவாய்த்துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை கடைபிடிக்க வாகனங்களில், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் மற்றும் திருடர்களை உயர் கோபுரம் அமைத்து அதன் மூலம் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் என 50 பேர் காலை முதல் இரவு வரை சுழற்சிமுறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கடைவீதியில் பல்வேறு பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.