திருப்பூரில் பள்ளிகள் திறப்பு குறித்து 401 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்

திருப்பூர்: வரும் 16ம் தேதி பள்ளி திறப்பதாக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: வரும் 16ம் தேதி பள்ளி திறப்பதாக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனிடையே, தற்போது நோய் பரவல் குறைந்து வருவதால், மீண்டும் பள்ளி கல்லூரிகளை வரும் நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் திறப்பதற்கு முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவு, குறித்து பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர், இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.



இதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 401 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 401 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக கூட்டத்திற்கு வரும் பெற்றோர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதன், பின்னர் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வுகுப்புகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு, அவைகளை இன்று மாலைக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும், என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது எனவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு உடனடியாக அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு சில பெற்றோர் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...