ஆந்திராவின் முக்கிய கஞ்சா வியாபாரி பாலக்காட்டில் கைது; 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தமிழகம் வழியாக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற, ஆந்திர மாநிலத்தின் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட இருவரை கேரள போலீசார் பாலக்காடு அருகே இன்று அதிகாலை கைது செய்தனர்.

கோவை: ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தமிழகம் வழியாக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற, ஆந்திர மாநிலத்தின் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட இருவரை கேரள போலீசார் பாலக்காடு அருகே இன்று அதிகாலை கைது செய்தனர்.



ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தமிழகம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநிலம் பாலக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த மினி லாரி ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். 

ஆனால், ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றதை அடுத்து போலீசார், வாகனத்தை துரத்திச்சென்று, மஞ்சாகுளம் தேவாலயம் அருகே மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து, வாகனத்தை சோதனை செய்த போது தண்ணீர் கேன்களுக்கு, கீழே மூட்டை மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, வாகனத்தில் இருந்து இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பத்துவரிபாளம் கிராமத்தைச் சேர்ந்த போரெஸ்ஸி வெங்கடேஸ்வரலு ரெட்டி (35), மற்றும் தமிழ்நாடு, சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த சேர்ந்த ஓட்டுனர் வினோத் குமார் (27) ஆகியயோர் என்பதும், இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 



இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 292 கிலோ கஞ்சா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஸ்வரலு, ஆந்திராவில் பிரபல கஞ்சா வியாபாரியாக வலம் வந்ததும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...