பொள்ளாச்சியில் பள்ளிகளில் திறக்க கருத்துககேட்பு கூட்டம்: கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகளை திறக்க வேண்டாம், என பெற்றோர்கள் கருத்து

பொள்ளாச்சி: தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 9, 10, 11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும், என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

பொள்ளாச்சி: தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 9, 10, 11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படும், என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அத்ரிப்பதியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து, பொள்ளாச்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று காலை முதலே பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தங்களது கருத்துக்களை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். 



அப்போது, பள்ளியில் வழங்கப்பட்ட கருத்துக்கேட்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும், ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளை திறந்ததால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதை சில பெற்றோர்கள் மேற்கோள் காட்டினர். 

மேலும், போதிய பேருந்து வசதி இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் கூட்டநெரிசலில் வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் தொற்று பெருகும் ஆபத்து உள்ளது, என்பதால் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...