வரும் 13 ஆம் தேதி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய கோவை வருகிறார் உதயநிதி ஸ்டாலின் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், 'எல்லோரும் நம்முடன்' என்ற திமுகவின் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.



கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், 'எல்லோரும் நம்முடன்' என்ற திமுகவின் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் 29ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைதுள்ளனர் என்று தெரிவித்தார், மேலும் அவர் பேசுகையில்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "எல்லோரும் நம்முடன்" இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். அதிலிருந்து குறிப்பாக இளைஞர்கள்,மாணவர்கள், பெண்கள் என தினமும் பலர் தங்களை திமுகவில் இணைத்து வருகின்றனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பல துறைகளில் தோல்வி கண்டுள்ள மத்திய பாஜக அரசிற்கு ஒத்துப்போகும் அதிமுகவை வீழ்த்துவதற்காக, இதுவரை 20 லட்சம் பேர் இணையவழி சேர்க்கை மூலம் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

புதிதாக திமுகவில் இணைபவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமர வைப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இதை பார்க்கின்றனர்.

மேலும், கொங்கு மண்டலத்தில் திமுகவை வழுவாக மாற்ற இளைஞர்களை அதிகமாக கழகத்தில் சேர்க்க மாநில இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11 ந்தேதி கோவை வருகிறார்.

கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டம் செல்ல உள்ள அவர், மீண்டும் 13ம் தேதி கோவையில் நடைபெற உள்ள 5 மாவடங்களுக்குகான இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்வார், என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...