வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்து. அதன்படி, இன்று அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு, பெற்றோர்கள் பள்ளிகளுக்கு வருமாறு பள்ளி நிர்வாகத்தால் அழைக்கப்பட்டிருந்தது. இதன்படி, பெற்றோர்கள் ஒவ்வொருவராக, அவர்கள பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வந்தனர். பின்னர், அவர்கள் வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு படிவம் ஒன்று கொடுக்கப்பட்டு பள்ளிகள் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து வெள்ளைத் தாளில் கருத்துக்களை எழுதிக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துகளை ஒன்றிணைத்து இன்றே, கல்வி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், பள்ளிக்கு வந்து கருத்து தெரிவிக்க முடியாத பெற்றோர்களின் கருத்துக்களை எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தலாம்.
இது குறித்து, பெற்றோர்கள் கூறும்போது, குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதில் பிரச்சனை இல்லை, ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன மாதிரியான பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது, என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும், என தெரிவித்துள்ளனர்.