வேலை கேட்கும் யாத்திரை: கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் போலீசாரிடையே தள்ளுமுள்ளு..!

கோவை: வேலை கேட்டு சட்டமன்றம் நோக்கி, யாத்திரைக்கு செல்ல முயன்ற, கோவை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 10கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

கோவை: வேலை கேட்டு சட்டமன்றம் நோக்கி, யாத்திரைக்கு செல்ல முயன்ற, கோவை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர். 



வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கும் காவல்துறையினர், வேலை கேட்கும் யாத்திரைக்கு அனுமதி மறுப்பதாக கூறிய இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் வேலை கேட்கும் யாத்திரையை தொடர முற்பட்டதால், போலீசாருக்கும் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 



இதனையடுத்து, அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, அங்கு கடும் தள்ளு முள்ளு நிலவியது. 

தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துனை தலைவர் நிருபன் சக்கரவர்த்தி கூறுகையில்: 

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவினர் தமிழகத்தில் இந்த வேல் யாத்திரை துவங்கி உள்ளனர். தலித் மற்றும் இஸ்லாமியர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்த இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். 

மேலும், கடந்த ஆறு வருடங்களில் 20 பேர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக கூறிய அவர், நீட் தேர்வு விவகாரத்தை திசை திருப்பவே, இந்த வேல் யாத்திரை.

80% மாணவர்கள் கல்வி முடித்து வேலை இன்றி உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இன்றோ 20 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருவதாக தெரிவித்தார். 80% மாணவர்கள் கல்வி முடித்து வேலை இன்றி தவித்து வருகின்றனர். 

அரியர்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்னும் ரிசல்ட் வராத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு, தமிழக அரசு துணை போவதாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சட்டமன்றம் நோக்கி நடைபயணம் துவங்க உள்ளதாக தெரிவித்தார். 



இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஊர்வலமாக வந்த அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போலீசார் தடுத்தி நிறுத்த முயன்றனர். வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கும் போது, உரிமைகளுக்கு நடைபயணம் மேற்கொள்பவர்களை தடுப்பதா..? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். 



அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்திய மாணவர் சங்கத்தினர் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...