கோவை: கோவை அருகே ஆவராம்பாளையம் ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தும், அணுகு சாலை அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க காலதாமதம் நீடித்து வருகிறது.

இதனால், கோவை-சக்தி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆவாரம்பாளையம் மேம்பாலம்: அணுகு சாலை அமைப்பதில் தொடரும் சிக்கல்
கோவை கணபதியில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும், அவ்வழியாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால், அடிக்கடி அப்பகுதியில் ரயில்வே கேட் திறந்து மூடப்பட்டது. இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. இந்த மேம்பாலம் 550 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. இந்த மேம்பாலம் சுமார் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இனி, மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை, என சொல்லக்கூடிய சர்வீஸ் சாலை மட்டும் அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சரவணம்பட்டியில் இருந்து கணபதி வழியாக அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் செல்வதற்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
கவுண்டம்பாளையம் முழுவதும் புழுதி
இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.66 கோடி ரூபாய் செலவில் ஒரு மேம்பாலமும், ஜி.என்.மில்ஸ் பிரிவில் ரூ.48 கோடி மதிப்பில் ஒரு மேம்பாலமும் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக, அருகில் உள்ள பகுதிகளில், சாலைகளை அகலப்படுத்தி போடப்பட்ட சாலைகள் சேதமடைந்து, அது சீரமைக்கப்படாதல் அப்பகுதி முழுவதும் புழுதி பறக்கிறது.

மேலும், போக்குவரத்து நெரிசலும் உண்டாகுவதால் அப்பகுதி மக்களும், மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகளும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். ஆவாரம்பாளையம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, கவுண்டம்பாளையம் மேம்பாளையம் பணிகளும் வேகம் எடுக்கும்.
குடிநீர் குழாய் உடைப்பால், அணுகு சாலை அமைப்பதில் சிக்கல்
இந்நிலையில், ஆவாரம்பாளையம் மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணுகு சாலை அமைக்கப்படும் இடத்தில், மாநகராட்சி சார்பாக குடிநீர் குழாய் செல்கிறது. மேம்பால பணிகள் காரணமாக, அந்த குடிநீர் குழாய், சேதமடைந்துள்ளன. அதனை சீர்செய்தால் மட்டுமே, அணுகு சாலை அமைக்கப்பட முடியும்.

இது தவிர, கணபதி வழியாக வரும் போது மேம்பாலத்தின் துவக்கப் பகுதியில் இந்த குடிநீர் குழாய் செல்வதால், மேம்பாலம் மீது ஏறவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால், அந்த நிதியை தற்போது யார் ஒதுக்கீடு செய்வது? என பிரச்சனை எழுந்துள்ளது, என கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்:
ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆவாரம்பாளையம் மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்போது, அணுகு சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பாக செல்லக்கூடிய குடிநீர் குழாயில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து நிதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தாமதம் செய்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக, அதை சரி செய்ய தற்போது போதுமான நிதியில்லை, என்றார்.
இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் கூறுகையில்:
கோவையில் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் நெடுஞ்சாலைத் துறை உள்ளது. சரியான திட்டமிடுதல் இல்லாததால், அனைத்து மேம்பால பணிகளும் ஆமை வேகத்தில் நடி பெற்று வர, காரணம்.

குறிப்பாக, ஆவாரம்பாளையம் ரயில்வே உயர்மட்ட பணிகள் உட்பட 36க்கும் மேற்பட்ட மேம்பால பணிகள் தி.மு.க ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆவாரம்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. இந்த மேம்பால பணிகள் தாமதம் காரணமாக ஆவாரம்பாளையம் பகுதியில் தொழில்வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சிய போக்கால், கோவையில் மேம்பால பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுகிறது, என்றார்.