கோவையில் ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை; 6 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த பீளமேடு போலீசார்..!

கோவை: கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில், ஜன்னல் திரைச்சீலை வடிவமைப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில், ஜன்னல் திரைச்சீலை வடிவமைப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை பீளமேடு அருகே லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 75), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய வீட்டு ஜன்னல் திரைச்சீலை கிழித்துவிட்டதால், அதை மாற்றி விட்டு புதிய திரைச்சீலையை பொறுத்த, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தைச் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வடிவமைப்பாளர் முகமது நிஜாஸ் (25), என்பவரை அணுகியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி வேலுவின் வீட்டிலுள்ள ஜன்னல்களில் புதிய திரைச்சீலைகளை பொருத்தும் வேலையில், முஹம்மது நிஜாஸ் ஈடுபட்டார். அப்போது, அவர் வீட்டு ஜன்னலுக்கு அருகில் ஒரு பெட்டியில் நகை இருப்பதைக் கண்டார். அதை பார்த்ததும், அந்த நகையை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். 

அதன்படி, பெட்டியில் இருந்த நகையை மட்டும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வேறு இடத்தில் மறைத்து வைத்து விட்டு, திரைச்சீலைகள் பொருத்தும் பணியை செய்து கொண்டிருந்ததுள்ளார். 

பின், வேலையை முழுமையாக முடித்து விட்டு, திரைச்சீலைகளை மாற்றியதற்கு உரிய கூலியை வாங்கிக் கொண்டார். பின்னர், அந்த வீட்டில் தான் மறைத்து வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு முஹம்மது நிஜாஸ் திரும்பி சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு, வேலு அந்த வீட்டிலிருந்த பொருட்கள் சரி பார்த்துள்ளார். அப்போது, ஜன்னல் அருகில் உள்ள பெட்டியில் இருந்த நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில், பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில், வேலுவின் வீட்டில் திரைச்சீலை அமைக்க வந்த முகமது நிஜாஸ் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் ஜோதிபுரத்தில் பதுங்கி இருந்த முகம்மது நிஜாசை மடக்கிப் பிடித்து கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து நகையை பறிமுதல் செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...