கோவை: கோவை அருகே ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த சம்பவத்தில், போலீசார் உடலை கைப்பற்றி அது கொலையா, இல்லை தற்கொலையா? என்று விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (38), கூலித்தொழிலாளி. இவருக்கு, திருமணம் ஆகாததால் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று, திருப்பதியை அவரது அண்ணன் கணேசன் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அவர் செல் போனை எடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டுக்கு கணேசன் வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
உடனே, கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, உடலில் காயங்களுடன் கட்டிலில் திருப்பதி இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, திருப்பதி இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார். யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்கின்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.