கோவை: கோவையில் மத்திய அரசு அலுவலகத்துக்குள் டீக்கடை அனுமதி வாங்கி தருவதாக கூறி, ரூ 5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ராம்நகரில் உள்ள லஜபதிராய் வீதியைச் சேர்ந்தவர் ரஷீத் (40) இருக்கும் மதுரை தானப்ப முதலியார் வீதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் (55), என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் ஆகியுள்ளனர்.
அப்போது, ரஷீத் தான் சொந்தமாக டீக்கடை வைக்க உள்ளதாக பிரான்சிஸ் சேவியர் செல்வராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உடனே பிரான்சிஸ் சேவியர், தனக்கு கோவை அவினாசி ரோட்டில் நவ இந்திய அருகில் உள்ள மத்திய அரசு அலுவலகமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் தெரிந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களிடம் பேசி அந்த அலுவலகத்தில் டீக்கடை வைக்க அனுமதி வாங்கி தருகிறேன் என கூறியதாக தெரிகிறது.
மேலும், அதற்கு முன்தொகையாக ரூபாய் 5 லட்சம் தர வேண்டி இருக்கும் என்று ரஷீதிடம் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய ரஷீத் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிரான்சிஸ் சேவியரிடம் அவர் கேட்ட ரூபாய் 5 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட, பிரான்சிஸ் சேவியர், அரசிடம் டீக்கடை அமைப்பதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து, ரஷீதிடம் கொடுத்து விட்டு, விரையில் அனுமதிக்கான அழைப்பு வரும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நாட்களாக ஆகியும் டீக்கடை அமைக்க எந்த அழைப்பும் வராததால், சந்தேகமடைந்த ரஷீத், பிரான்சிஸ் சேவியரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், டீக்கடை வைக்க அனுமதி பெற்றுத்தர, தேவையில்லை, என்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தாருங்கள் என்று பிரான்சிஸ் சேவியரிடம் கேட்டுள்ளார்.
அதற்கும், பிரான்சிஸ் சேவியர் முறையான பதில் அளிக்காமல் தட்டிக்கழித்துள்ளதாக தெரிகிறது. இதனால், ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்று அவர் மோசடி செய்ததை உறுதிப்படுத்திய, ரஷீத் இதுகுறித்து, கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், பிரான்சிஸ் சேவியர் செல்வராஜை விசாரித்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து பின் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தி கைது செய்தனர்.