தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை எதிரொலி: ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ள்ளது, என கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கோவை: தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தொடரும் ஜனநாயகப் படுகொலை மற்றும் அச்சுறுத்தல்களை கண்டித்து, கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோவை: தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தொடரும் ஜனநாயகப் படுகொலை மற்றும் அச்சுறுத்தல்களை கண்டித்து, கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், புது நெல்லூரில் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் மோசஸ். அப்பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதையும், நில அபகரிப்பு குறித்த செய்திகளை அண்மையில் வெளியிட்டுள்ளார். 

இதனையடுத்து, சமூக விரோதிகள் அவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், நேற்று இரவு புது நெல்லூரில் தனது வீட்டிலிருந்த போது மோசஸின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், வீட்டை விட்டு வெளியே வரச் செய்துள்ளனர். 

பின், மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு, அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மோசஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நாடு முழுவதும் உள்ள பதிற்றிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை மற்றும் கண்டனத்தை பெற்றுள்ளது. இந்த ஜனநாயகப் படுகொலையை, கோவை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், "தமிழகத்தில் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக மாறியுள்ளது", என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், உடனடியாக, தமிழக அரசு இந்த கொலையில் தொடர்பு கொள்ள அனைவரையும் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், எனவும் கோவை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

உயிரிழந்த பத்திரிக்கையாளர், மோசஸ் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும், என கோவை பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...