பொள்ளாச்சி - கோவை சாலையில் மினி லாரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 140 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சி - கோவை சாலை சிடிசி மேட்டில் மினி லாரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: பொள்ளாச்சி - கோவை சாலை சிடிசி மேட்டில் மினி லாரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள சிடிசி மேடு பகுதியில் மினி லாரி ஒன்று ஆட்களின்றி நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் சாக்குப் பைகள் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார் சாக்கு மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கேரளா எண் கொண்ட வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து, வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...