கோவை: கோவை பொள்ளாச்சி - பல்லடம் ரோடு நான்கு வழி சாலைக்கு முதற்கட்டமாக 4.8 கிலோ மீட்டர் தூரம் வரை பணிகள் நடக்க ரூ.15 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கியமான வழித்தடமாக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி - திண்டுக்கல் ரோடு, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி - பல்லடம் ரோடு ஆகிய முக்கிய ரோடுகளை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டு, முதற் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி, தற்போது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடங்கியுள்ளது. முதற் கட்டமாக பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, கரப்பாடி பிரிவு - கள்ளிப்பட்டி பிரிவு வரை 4.8 கிலோ மீட்டர் தூரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி -பல்லடம் ரோடு சாலை விரிவாக்க பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 4.8 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு, சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி 7.5 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு இரு வழிப் பாதைகள் அமைத்து, 1.5 மீட்டர் அகலம் கொண்ட தடுப்பு நடுவில் அமைக்கப்படும். செங்குட்டுபாளையம் கிளை வாய்க்கால் மற்றும் புளியம்பட்டி அருகே உள்ள மேட்டு பகுதிகள் 5 அடி வரை உயரம் குறைக்கும் பணிகள் நடக்க உள்ளது. இந்த பணிகள் இன்னும் எட்டு மாத காலத்தில் முடிவடைந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.