கோவை சரவணம்பட்டியில் நகை கடையின் பூட்டை உடைத்து 25 கிலோ வெள்ளி மற்றும் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை..! போலீசார் விசாரணை

கோவை: கோவை சரவணம்பட்டியில் நகை கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ மற்றும் வெள்ளி 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை சரவணம்பட்டியில் நகை கடையின் பூட்டை உடைத்து 5 கிலோ மற்றும் வெள்ளி 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). சத்தி மெயின் ரோடு பகுதியில் மாருதி ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து கடையின் உரிமையாளர் முருகனுக்கும், சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சரவணம்பட்டி போலீசார் மற்றும் முருகன் ஆகியோர் நகை கடைக்கு வந்துள்ளனர். நகைக்கடையில் முன்பக்க கதவுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றது தெரியவந்தது.

போலீசார் கடையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உட்புறம் உள்ள லாக்கரில் வைக்கபட்டுருந்த 80 பவுன் தங்க நகைகள் பத்திரமாக இருப்பது 25 கிலோ வெள்ளி பொருட்களை மற்றும் 10 பவுண் பழைய தங்க நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவுகள் இயங்காமல் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் கைரேகை மற்றும் தடயங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...