கூடலூரில் மூன்று சிறு தொழில் நிலையங்களில் தீவிபத்து..! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள மூன்று சிறு தொழில் நிலையங்களில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிலுள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமாகின.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள மூன்று சிறு தொழில் நிலையங்களில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமாகின.



இதனிடையே, வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் ஒர்க் ஷாப் ஒன்றிலிருந்து தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், தீப்பிடித்து எரிந்த கடைகளில் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் மற்றும் துணிகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவி அனைத்து பொருட்கள் மற்றும் இயந்திரங்களும் சேதம் அடைந்துள்ளன.



வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வரும் திலீப், சோபா செட் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்த சபி மற்றும் மத்திய அரசின் கைத்தொழில் திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற்று துணிப் பைகள் தயாரிக்கும் நிலையம் நடத்தி வந்த மோகனசுந்தரி ஆகியோரது மூன்று தொழில் நிலையங்களும் தீயில் முழுமையாக எரிந்து சேதம் அடைந்து உள்ளன.



இதில் மோகனசுந்தரி, சபி ஆகியோர் தொழில் தொடங்கி ஓரிரு மாதங்கள் ஆன நிலையில், தொழில் நிலையங்கள் முழுவதுமாக தீயில் எரிந்ததுள்ளன. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், இயந்திரங்கள் முழுமையாக தீயில் எரிந்து சேதம் அடைந்ததால் தொழில் நடத்தியவர்கள் தற்போது நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ பரவி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...