நீலகிரி: நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலை தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலை தோட்டத்தில் பன்றிக்கு வைத்திருந்த சுருக்கில் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து இப்பகுதி பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் காட்டுப் பன்றிகளுக்கு தனியார் எஸ்டேட் நிர்வாகம் வைத்திருந்த சுருக்கில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுத்தையின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அங்கேயே எரித்தனர். மேலும், இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.