கோவை ராஜவீதியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - கணக்கில் வராத ரூ.1.70 லட்சம் பணம் பறிமுதல்!

கோவை: கோவை ராஜவீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1.70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை ராஜவீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1.70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்று வருவதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தீயணைப்புத் துறை அதிகாரி பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவரை கைது செய்தனர். உரிமம் வழங்க 5000 ரூபாய் பெற்ற அவரை கைது செய்தனர்.



இந்நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



குறிப்பாக சார்பதிவாளர் கார்த்திகேயன் அறை மற்றும் அலுவலக வளாகத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திர பதிவிற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 1.70 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...