கோவையில் ரேஷன் கடைகள் மூலம் 46 லட்சம் முக கவசங்கள் விநியோகம்

கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும், என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.


கோவை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும், என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதன்படி, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கும் பணி நடைபெற்று வந்தது. இதுவரை, கோவை மாவட்டம் முழுவதும், 46 லட்சம் முக கவசங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை, கோவை மாநகராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் 41 லட்சத்து 53 ஆயிரம் முககவசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு மட்டுமே முககவசம் வழங்க வேண்டியதுள்ளது. கிராமப்புற பகுதிகளில் 5 லட்சத்து 26 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 4 லட்சத்து 32 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட வேண்டும். இந்த முக கவசம் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன,’’ என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...