கோவையில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு மற்றும் சுகாதார பணியாளர்கள் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை - மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

கோவை: கோவையில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு மற்றும் சுகாதார பணியாளர்கள் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.


கோவை: கோவையில் தன்னார்வ அமைப்பு சார்பில் ஏழை, எளியோருக்கு மற்றும் சுகாதார பணியாளர்கள் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.

சமுதாய முன்னேற்றத்துக்காக சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன், எப்போதும் ஒரு தனித்தன்மை வாய்ந்த பிரச்சாரத்துடன், பசுமை திட்டங்களை செய்து வருகிறது. இந்த தொற்று நோய் சூழ்நிலையிலும், தீபாவளியை முன்னிட்டு இன்று புதிய புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

போத்தனுார், வடிவு நகரில் நடந்த இந்த நிகழ்வில், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் வழங்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, சந்தின்ஸ் யுவா பவுண்டேஷன் அனைவரையும் அழைத்திருந்தது.

இந்த அருமையான சமுதாய நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட நிர்வாக அதிகாரி டி. ராமதுரை முருகன் விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர்கள் பேசும்போது, ‘ தொற்று இல்லாத, மாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வோம்’ என்பதை வலியுறுத்தினர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சி. சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சசிகலா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.



வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள ஏழை எளிய மக்கள், சுகாதார பணியாளர்கள், குழந்தைகள், அனாதை இல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த மக்கள் என பயனாளிகளை தேர்வு செய்து, புத்தாடைகளை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வழங்கியது.



இந்த நிகழ்ச்சி முழுவதும் கோவிட் 19 பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி நடந்தது. கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பான உறையில் புத்தாடைகள் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஈதலின் இன்பத்தை பெற வேண்டுமானால், சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வழங்க இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

மேலும், எஸ்.எஸ்.எஸ்.வி.எம் (SSVM) கல்வி நிறுவனங்கள், தேவையான குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...