பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு வாணிப கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜோதிநகரில், செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கிடங்கில் 40க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் தான் வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா நிதி நெருக்கடி என்ற காரணத்தை காட்டி போனஸ் குறைத்து வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு போதாது.



எனவே, போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி நுகர்வோர் வாணிப கிடங்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் விடுப்பு கூட இல்லாமல் நிர்வாகத்திற்காக உழைத்தோம், ஆனால் இந்த 10 சதவீத போனஸ் என்பது மிகவும் குறைவு. எனவே 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...