ரூ.380 சம்பளம் வழங்க வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ரூ.380 சம்பளம், பணி நிரந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் சுமார் 2 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ரூ.380 சம்பளம், பணி நிரந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் சுமார் 2 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில், தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு மின்வாரிய துறை அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ 380 வழங்கிட வேண்டும், என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்த போராட்டம் குறித்து, அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் நாகராஜ் கூறுகையில், "1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின்பனிகளை செய்து வருகிறோம்.

"புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை. மின்வாரிய துறை அமைச்சர் அறிவித்தவாறு ரூ. 380 சம்பளம் வழங்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...