கோவை: கோவையில் டெங்கு மற்றும் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், எனவும் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, என்று மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘‘கோவையில் டெங்கு நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு பணிகளில் 2500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்கு சுமார் 800 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்."
மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள், டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடமாட்டார்கள். முக்கிய பகுதிகளில் காலை, மாலை என இரண்டு நேரங்களில் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, கொரோனா மற்றும் டெங்கு தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாநகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, என்றார்.