செம்மர கடத்தல் மன்னன் கோவையில் கைது; ஆந்திர போலீஸ் நடவடிக்கை

கோவை: செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாய் (55), கோவையில் பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அவரை கோவையில் வைத்து இன்று கைது செய்தனர்.


கோவை: செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாய் (55), கோவையில் பதுங்கியிருப்பதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அவரை கோவையில் வைத்து இன்று கைது செய்தனர்.

இன்று காலை, ஆந்திரா, கடப்பா போலீஸ் எஸ்.பி அன்புராஜன் தலைமையில் ஒரு தனிப்படை போலீஸார் கோவைக்கு வந்தனர். அவர்கள், கோவை போலீசார் உதவியுடன், சோதனை மேற்கொண்டதில், செம்மர கடத்தல் மன்னன் ஹக்கீம் என்கிற பாஷா பாயை, உக்கடம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹக்கீம் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து இவரை தேடி வந்ததாகவும், ஆந்திரா போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோவை மற்றும் தமிழகத்திலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அவர் இருந்துள்ளார்.

செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹக்கீமை ஆந்திர போலீசார், அழைத்து சென்றதை தொடர்ந்து, தமிழக போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைக்க, ஆந்திரா சென்று உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...