கொரோனா கண்காணிப்பு எதிரொலி: கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் 75 சதவீதம் குறைந்துள்ளது

கோவை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவை - கேரளா மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 75 சதவீதம் குறைந்துள்ளது, என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவை - கேரளா மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது 75 சதவீதம் குறைந்துள்ளது, என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு அதிகமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த போதிலும் கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் பொதுப்போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி பகுதி, ஊரக பகுதிகளில் கூடுதல் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, இந்த இரண்டு மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கேரள மாநிலத்திற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், வாளையாறு சோதனை சாவடி மட்டுமல்லாது அதிக கண்காணிப்பு இல்லாத சோதனை சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. கோவை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கோவை வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கொரோனா தொற்றினால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அதன் பின்னர், கோவை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது கடந்த சில மாதங்களில் 75 சதவீதமாக குறைந்து உள்ளது.

இருப்பினும், இருசக்கர வாகனங்களில் அரிசி கடத்தல் குறைந்த அளவில் நடைபெற்று தான் வருகிறது.. இதனை, உடனுக்குடன் கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம். கடந்த மாதம் மட்டும் 48,000 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...