கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அவரின் விருப்பப்படி தானம்

கோவை: கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் விமலாதேவி தம்பதியரின் மகன் வைதீஸ்வரன் (17). இவர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்தார்.


கோவை: கோவை எட்டிமடை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் விமலாதேவி தம்பதியரின் மகன் வைதீஸ்வரன் (17). இவர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம், கோவில்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, மகனை இழந்த அவரது தாய் மற்றும் தந்தை, அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவருடைய உடல் உறுப்புகள் தானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், மூளைச்சாவு ஏற்பட்ட தனது மகன் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும், எட்டிமடை கிராம வளர்ச்சிக்காகவும் ஆன்மீக பணிகளிலும் பெருமளவில் ஈடுபட்டு வந்ததால் உடல் உறுப்பு தானம் செய்ய அவரே விரும்பி இருந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...