திருப்பூர்: திருப்பூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

திருப்பூருக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தொழில் மையம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 5,592 பயனாளிகளுக்கு 66 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரத்து 822 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், முடிவுற்ற பணிகளான கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம் திருப்பூர் மாநகராட்சியில் இரண்டாம் மண்டல அலுவலக கட்டிடம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம், மீன் வள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 8 துறைகளின் சார்பில் 31 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து, புதிதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை வட்டம் பண்ணை கிணறு கிராமத்தில் 82 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுதல், மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்கள், வெள்ளகோவில் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் கட்டுதல் மருத்துவக் கல்லூரி சேவை மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை 287 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.