கோவை கரும்புக்கடையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மணல் குன்று அகற்றம்!

கோவை: கோவை கரும்புக்கடையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மணல் குன்று அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.


கோவை: கோவை கரும்புக்கடையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மணல் குன்று அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துபாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டான அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலப் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. உக்கடம்- கரும்புக்கடை இடையே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, உக்கடம்- கரும்புக்கடை இடையே மேம்பாலப் பணிகள் ஓரளவு முடிக்கப்பட்டுள்ளதால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல அன்மையில் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், கரும்புக்கடை அருகே பெரும் மணல் குன்று ஒன்று போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று கொண்டிருந்தனர். இது சம்பந்தமாக கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதனை அடுத்து, அந்த மணல் குன்று அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ‘‘மணல் குன்றுகள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எளிதாக சென்று வர முடிகிறது. இதனால் கோவை மாநகர மக்கள் பெரும் நன்மை அடைகின்றார்கள். இந்த கொரோனா காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு இடையே சென்று வந்த போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சிக்கும் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...