கோவையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்ச்சங்க கூட்டுகுழு சார்பில் ஆர்பாட்டம்; தீபாவளி போனஸ், பண்டிகை கால முன்பணம் போன்ற கோரிக்கைகள் முன்வைப்பு

கோவை: கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்ச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: 40 சதவீதம் போனஸ், ரூ.10 ஆயிரம் முன்பணம், வேலை நேரம் மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்து டாஸ்மாக் ஊழியர் தொழிற் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் சங்கத்தின் கூட்டு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



அப்போது, இந்த கோரிக்கைகளை உடனடியாக டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டாஸ்மாக் அனைத்து கூட்டுக்குழு சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறுகையில், தமிழக அரசு தொழிற்சங்ககளுடன் கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக பத்து சதவீத போனஸ் அறிவித்து உள்ளது. இதனை ஏற்கமாட்டோம் எனவும் நாற்பது சதவீத போனஸ் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்கிட வேண்டும் என்றார்.

இந்த பண்டிகை கால முன்பணத்தை மாதம் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளலாம் என கூறிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் டாஸ்மாக் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி அரசிற்கு வருமானம் ஈட்டி கொடுத்து உள்ளதாக தெரிவித்தார். 

மேலும், சிறு சிறு பிரச்சனைகள் டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். டாஸ்மாக் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளமே 15,000 எனவும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை என்றார். மேலும், டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...