கோவை: கோவை உருமாண்டாம்பாளையம் பகுதியில் சாலையை காணவில்லை என பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஜி.என்.மில்ஸ் உருமாண்டாம் பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சார்பில் சாலையை காணவில்லை, நெடுஞ்சாலையில் கிணறுகள், கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை சாலையை எடுத்துச் சென்றது யார்? குடிநீர் வடிகால் வாரியமா? என கேட்டு கோவை ஜி.என்.மில்ஸில் இருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் சாலையில் கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பிளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளது.
கோவை ஜி.என்.மில்ஸ்சில் இருந்து உருமாண்டாம் பாளையம், உடையாம் பாளையம், கணபதி செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிக்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழிகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக மூடப்படாமல் இருந்தது.
இதனை கண்டித்து, கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் உருமாண்டாம் பாளையம் பொதுமக்கள் நடத்தியதன் தொடர் போராட்டம் காரணமாக குழிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மூடினர். ஆனால், அதன் மீது தார் சாலைகள் போடாத காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
இந்நிலையில், புதிதாக போடப்பட்ட அத்திக்கடவு குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்ய பல இடங்களில் மிகப் பெரிய குழிகள் தோண்டப்பட்டு உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால், அக்குழிகளை மூடாமல் சாலையின் நடுவே கிணறு போல் அப்படியே பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்ட போது சாலையை தோண்டுவதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு உரிய தொகை செலுத்திவிட்டதாக தெரிவிக்கின்றனர். வடக்கு நெடுஞ்சாலைத்துறையினரோ குடிநீர் வடிகால் வாரியத்தினர் குறிப்பிட அளவை விட அதிகமாக தோண்டியுள்ளனர் என ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம், உருமாண்டாம் பாளையம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து ஜி.என்.மில்ஸில் இருந்து உருமாண்டாம் பாளையம் செல்லும் சாலையில் கிணறு போல உள்ள குழியின் முன்பு சாலையை காணவில்லை, நெடுஞ்சாலையில் கிணறுகள், கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை, சாலையை எடுத்துச் சென்றது யார்? குடிநீர் வடிகால் வாரியமா? என கேட்டு பிளக்ஸ் வைத்து சாலையில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என பூமா தேவிக்கு தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ வைத்து கற்பூரம் ஏற்றி நூதன முறையில் வழிபாடு நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், பருவமழை தொடங்கிவிட்டதால் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், விபத்துகள் ஏற்படுகிறது. சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவில் இருப்பதாகவும், பல இடங்களில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை மீட்க வேண்டும் எனவும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் உடனடியாக சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.