கோவை: பா.ஜ.கவின் வெற்றி வேல் யாத்திரை பயண திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை எனவும் எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளும் அரசு பயந்துவிட்டது என எண்ண தோன்றுகின்றது என பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
கோவை: பா.ஜ.க வின் வெற்றி வேல் யாத்திரை பயண திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை எனவும் எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்கு ஆளும் அரசு பயந்துவிட்டது என எண்ண தோன்றுகின்றது என பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.
பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக இன்று 300க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டனர். பா.ஜ.க அலுவலகம் முன்பாக அரோகரா முழக்கம் எழுப்பிய அவர்கள், முருகன் பஜனை பாடல்களை பாடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோரும் இந்த பஜனை பாடல் பாடும் நிகழ்வில் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர். இந்த நிகழ்வில் 10 அடி உயர வேலுடன் பா.ஜ.க தொண்டர்கள் பஜனை பாடல்களை பாடினர்.
பஜனை நிகழ்விற்கு பின்னர் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, மாநில தலைவர் முருகன் திருத்தனியில் வேல்யாத்திரையை துவக்கிவிட்டதாக கிடைத்த செய்தி ஆறுதல் அளிக்கின்றது எனவும் தமிழக முதல்வர் சட்டம் தன் கடமையை செய்யும் என செல்வதாகவும் அதுபோல பா.ஜ.கவும் தன் கடைமையை செய்யும் என தெரிவித்தார்.
வேல் யாத்திரைக்கு மாவட்ட வாரியாக அனுமதி பெற்று நடத்தக் கூறிவிட்டு, திடீரென அனுமதியில்லை என தமிழக அரசு மாறியது சரியானதல்ல எனவும் பா.ஜ.கவின் வெற்றி வேல் யாத்திரை பயண திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முதல்வர் வரும் போது கடைபிடிக்க பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர், 144 உத்தரவு அமலில் இருந்தால் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடந்து இருக்க கூடாது என கூறியவர், அதிமுக மந்திரிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை எப்படி பின்பற்றுகின்றனர் என்பது அவர்கள் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும் என்றார்.
மேலும், எதிர்கட்சிகள் அழுத்தத்திற்கு ஆளும் அரசு பயந்துவிட்டது என எண்ண தோன்றுகின்றது என கூறிய அவர், கோவையில் வேல் யாத்திரை சமூக இடைவெளியுடன் நடத்தப்படும் என்று தெரிவித்தார். பா.ஜ.க பெண்கள் நடத்திய இருசக்கர வாகன பேரணியில் பெண்கள் ஹெல்மெட் அணியாமல் பேரணி சென்றது தொடர்பான கேள்விக்கு தலைக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்.