கோவையில் இருவேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைப்பு!

கோவை: கோவையில் கைவிடப்பட்டு தவறான முறையில் கருவுற்ற நிலையில், குழந்தைகளை பெற்று அனாதையாக வீசிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் கைவிடப்பட்டு தவறான முறையில் கருவுற்ற நிலையில், குழந்தைகளை பெற்று அனாதையாக வீசிச் செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் முன்னிலையில் நேற்று காப்பக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக வீசப்பட்டு இருந்தது. 2.4 கிலோ இருந்த அந்தப் பெண் குழந்தை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த அக்டோபர் 14ம் தேதி பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தனியாக விடப்பட்டிருந்தது. 1.1 கிலோ எடையில் இருந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவர்களின் சிகிச்சை சிகிச்சையின் பலனாக குழந்தையின் உடல் எடை 2.7 கிலோ ஆக அதிகரித்தது. அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் உடல் நலம் சீராகி ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் 2 குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தரம் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு கருதி குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதில், பெண் குழந்தை தர்மபுரியில் உள்ள காப்பகத்திலும், ஆண் குழந்தை திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியின் போது, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் காளிதாஸ், இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...