கோவை மத்திய சிறையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பி.ஆர்.நடராஜன் எம்பி திறந்து வைத்தார்!

கோவை: கோவை மத்திய சிறையில் பி.ஆர்.நடராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவறை உள்ளிட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் பி.ஆர்.நடராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவறை உள்ளிட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.



கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளை சந்திக்க வாரம் மூன்று நாட்கள் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.



இந்த பார்வையாளர் பகுதியில் காத்திருக்கும் இத்தகைய பொதுமக்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதனையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பிடம் மற்றும் ஆழ்குழாய் வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தனர்.



இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்பி ரூ.14.22 லட்சம் நிதியினை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி தந்தார். இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கான ஆண், பெண் கழிவறைகள், கழிவுநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.



இந்த நிலையில், இதனை மக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக தலைவர் ஜி.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று நிறைவடைந்த திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை சிறைத்துறை எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...