கோவையில் சட்ட விரோதமாக மாணவர்களின் சான்றிதழ் பறித்த விவகாரம்: நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம் - மாணவர் பெருமன்றம் அறிக்கை

கோவை: கோவையில் சட்ட விரோதமாக மாணவர்களின் சான்றிதழ்களை பறித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மாணவர் பெருமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக மாணவர்களின் சான்றிதழ்களை பறித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மாணவர் பெருமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 3 மாணவர்களின் சான்றிதழ்களை காந்திபுரம் 6வது வீதியில் அமைந்துள்ள SSM Educational Trust என்ற நிறுவனம் சட்ட விரோதமாக பறித்து வைத்துள்ளது. சான்றிதழ்களை பெற்றுத் தரக்கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

SSM Educational Trust எந்த காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள IS (உளவுப் பிரிவு) கணேஷ் என்பவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினோம். "அது காட்டூர் Station limitல தான் வருகிறது. நீங்க மாவட்ட ஆட்சியரிடம் எல்லாம் மனு கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்தாலும் எங்களுக்குத்தான் அனுப்பி வைப்பாங்க; இங்க stationக்கு வாங்க. பேசிக்கலாம்" என்றார்.

அவர் பேச்சை நம்பி, C1 காட்டூர் காவல் நிலையத்திற்குச் சென்றால், காவல் ஆய்வாளர் லதா அவர்கள், "இங்கே எதுக்கு வந்தீங்க. சூலூர் போலீஸ் ஸ்டேசன் போங்க, அங்க போய் Complaint கொடுங்க" என்று அதிகாரத் தொனியில் பேசினார். மேலும், "அந்த அலுவலகம் காந்திபுரத்தில் இருக்குதுனா, இங்க கொடுக்க வந்திருவீங்களா?" என்றார். ஒரு மாணவர் அமைப்பின் நிர்வாகிக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்கள் நிலைமை சொல்லவா வேண்டும்!

3 மாணவர்களும் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரியில் சேர சான்றிதழ்கள் இல்லாததால், குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக ரூ.300 சம்பளத்திற்கு தினக்கூலியாக வேலைக்குச் சென்று வருகின்றனர்.

இதனிடையே, நேற்று (05.11.2020) காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் 3 மாணவர்களும் விடுப்பு எடுத்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

தினமும் வேலைக்குச் சென்றால்தான் 3 வேலை உணவு உண்ண முடியும் என்கின்ற நிலையில் உள்ள மாணவர்களை, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை இவ்வாறு அலைக்கழிப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அடிபட்டு, மிதிபட்டு, உயிர்பலி கொடுத்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) பொறுப்பாளர்களை இப்படியா நடத்துவது!

இது இன்று மட்டுமல்ல. பலமுறை, பல்வேறு காவல் நிலையங்களுக்கு மனு கொடுக்கச் சென்றால் இதே அவல நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. "காவல் நிலையத்திற்கு போனால் தீர்வு கிடைக்கும்" என்று நம்பி காவல் நிலையத்திற்குச் செல்லும் பாதிக்கப்பட்ட மக்களை காவல்துறை அலைக்கழிப்பது வாடிக்கையாகிவிட்டது.

சாமானியர்களுக்கு காவல் நிலையக் கதவுகள் திறக்க மறுப்பதேன்? காவல்துறை யாருடைய நண்பன்?

மாணவர்களின் சான்றிதழ்கள் கிடைக்க "கடமை தவறாத" காவல்துறை குரல் கொடுக்கிறதோ, இல்லையோ அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) கட்டாயம் குரல் கொடுக்கும். இறுதி வரை அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். எங்களுடைய அறவழிப் போராட்டம் தொடரும்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...