திருப்பூர்: பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி திருப்பூரில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியை சேர்ந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக சார்பில் இன்று துவங்கி டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேல் பிரச்சார பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசே தடை விதித்திருந்த சூழ்நிலையில், தடையை மீறி இன்று சென்னையிலிருந்து பாஜக மாநில தலைவர் முருகன் யாத்திரையைத் தொடங்கினார்.

யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசு முறையாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், யாத்திரைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கிருந்த தனியார் செல்போன் நிறுவன உயர் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, உடனடியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை இறங்கச் செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர் . இதனால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.