கோவை: எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் கோவை அவிநாசி சாலையில், நேற்று வழக்கத்துக்கு மாறாக மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாமல் சிக்கி கொண்டது.

அவிநாசி சாலை, சித்ரா ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டல் லீ மெரிடியன் வரை நேற்று இரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக விரைந்து வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ்களும் அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது.
தொடர்ந்து ஒலி எழுப்பியபடி கடந்து செல்ல முயன்றும், அடுத்தடுத்து வாகனங்கள் நின்றதால் ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தன. பின், படிப்படியாக போக்குவரத்து நெரிசல் குறைந்த போதும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நெரிசலில் மட்டி கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை, கோவை மற்றும் நீலகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதலமைச்சரின் வருகையை ஒட்டி போக்குவரத்து சீர்ப்படுத்தபட்டதால், இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.