சிசிடிவி ஆதாரத்துடன் திருட்டு குறித்து புகார் அளிக்க சென்றும் நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதம்; புகார்தாரர் குடும்பத்துடன் தர்ணா

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி. இவர், மேற்கு தோட்டம், முருகன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, முன்தினம் இரவு வழக்கும் போல், அவர் கடையை பூட்டி சென்றுள்ளார்.

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி. இவர், மேற்கு தோட்டம், முருகன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, முன்தினம் இரவு வழக்கும் போல், அவர் கடையை பூட்டி சென்றுள்ளார். 



இந்த நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.



அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லட்சுமி சென்றுள்ளார். ஆனால், காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதாக கூறி, லட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கண்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அவரது புகார் குறித்து, தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...